அன்பின் மடல் - January 2024

 

அன்பின் மடல்

January 2024


''நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுகிறதுமில்லை'' என்ற வாக்குத்தத்தம் நமக்கு சதாகாலமும் இருக்கிறபடியால், இந்த புத்தாண்டிலும் அவரே நமக்கு போதுமென்ற சிந்தையோடு உங்கள் அனைவருக்கும் எங்களின் புத்தாண்டு வாழ்த்துகள். கடந்த நாட்களில், தேசம் தேவனை அறியவும், தேவ சபைகள் தெளிவு பெறவும், தேவனுடைய பிள்ளைகள் தங்கள் பொறுப்புகளை உணரவும், உங்களின் ஒத்தாசையால் ஓடிக்கொண்டிருக்க உங்கள் ஜெபமும், தாங்கும் கரங்களும் எங்களை வெகுவாக உற்சாகப்படுத்தினதற்காக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

வட இந்திய பணித்தளங்கள், விசேஷமாக உ. பியிலும், ஜார்க்கண்டிலும் அதிகமாக தாக்கப்பட்டுக் கொண்டுவருகிறதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை இந்த மாநிலங்களில் காணப்படுகிறது. சத்துரு தனக்கு கொஞ்ச காலம் உண்டென்று அறிந்து தன் முழு பெலத்தினையும் உபயோகிக்கத் தொடங்கியுள்ளான். ஆயினும், 

'நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே, ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்' என்றவரின் வார்த்தை நமக்குப் போதுமானதாயிருக்கிறதே. (வெளி. 12:12; 2:10)

பிறந்த இந்த புத்தாண்டின் காரியங்களையும் இன்றைய சூழ்நிலையில் எப்படி நடக்க வேண்டும் என்று தேவ சமூகத்தில் காத்திருந்தபோது ஆவியானவர் மீகா 7-ம் அதிகாரத்தினையே தியானிக்கும்படி ஏவினதினாலும், வரும் நாட்களில் நம்முடைய ஊழியத்தின் விரிவாக்கத்தினைக் குறித்தும் சுட்டிக் காட்டின காரியங்களையே உங்களோடு பகிர்ந்துகொள்ளத்             தூண்டப்படுகிறேன்.

தேசத்தின் நிலை:-

'தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான். மனுஷரில் செம்மையானவன் இல்லை. அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள். அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும். அதிபதி கொடு என்கிறான். நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான். பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான். இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.' (மீகா 7:2,3)

தேசத்தில் பல பெரிய காரியங்கள் செய்யப்படுவது உண்மைதான்; என்றாலும், ஒழுக்க நெறியில் படுபாதாளம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மை அல்லவா! அரசியலில் கட்சிகள் (ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும்) ஒருவர் மேல் ஒருவர் சேற்றை அள்ளி வீசுவதிலேயே முழுக் கவனம் செலுத்தி, மக்கள் நலனைக் குறித்து மறந்து போனார்கள். ஏழைகளின் நிலைமை பரிதாபம்.

GST என்ற 'அட்டை' ஒன்று இன்று அனைத்து பேரின் இரத்தத்தினை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கிறது. ஆட்டோவில் பிரயாணம் செய்பவர் ஏழைகளே. அந்த ஆட்டோ ஓட்டியும் ஏழைதான்;. ஆனால், ஒன்றிய அரசு பிரயாணத்திற்கும் GST என்று சொல்லி, அரை குறையாக இருப்பதினையும் பிடுங்க ஆரம்பித்துள்ளதே!

உத்தரப் பிரதேசத்தில் பெண் நீதிபதிக்கு பாலியல் கொடுமை. 'என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதியுங்கள்' என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். தன்னுடைய கடிதத்தில், 'சாமானிய மக்களுக்கு நீதி வழங்க விரும்புகிறேன்; ஆனால், பாலியல் துன்புறுத்தலுடன் என்னால் வாழ முடியாது. பலமுறை மாவட்ட நீதிபதியால் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்;, நீதிமன்றத்தில் இருப்பவர்கள் என்னை தீய சக்தியாகப் பார்க்கின்றனர், குப்பை போலவும் பார்க்கிறார்கள். பணியிடங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் என்பது ஒரு பெரிய பொய். உச்ச நீதிமன்றம் உட்பட யாரும் எனது குரலைக் கேட்க மாட்டார்கள். எல்லாரும் என்னை தற்கொலைக்குத் தள்ளுவார்கள். மாவட்ட நீதிபதி ஒருவர் என்னை அவரது வீட்டிற்கு இரவு வர சொல்கிறார். பாலியல் சுரண்டல்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக, 2022 -ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே, நான் இறப்பதற்கு அனுமதி வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார். (டிசம்பர் 15-ம் தேதி செய்தித்தாள்)

ஒரு நீதிபதிக்கே இந்த நிலைமையெனில், மற்றவர்கள் கதி என்ன? பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவது வாடிக்கை ஆகிவிட்டது. கூட்டு வன்முறைக்கு ஆளாக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்பதும் நாம் அறிந்ததே.

'விஷ;வகுரு' என்னும் உலகில் 3-ம் இடத்திற்கு பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டோம் என்ற மார்தட்டலும் வெற்று வாதங்களே. ஏழைகளைத் தான் பெருக்கி இருக்கிறோம்; . வேதனையைத் தான் தேசம் அனுபவிக்கிறது. நித்தமும் பாதுகாப்பற்ற நிலைமையும், லஞ்சப் பேயின் பிடியில் குடிமக்களும் உழன்றுவருகிறபடியால், புசிப்பதற்கு.... கனி இல்லை. (மீகா 7:1)

'அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப் பார்க்கிலும் கடுங்கூர்மையானவன். உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது. இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு' (மீகா 7:4) என்ற காரியங்கள் இன்று எத்தனையாய் உண்மை என்பது கண்கூடு. கதற வேண்டிய நாட்கள் இவைகள்;.         தேசத்தின் மீது தண்டனை வந்தால் தேவ பிள்ளைகளையும் அது பாதிக்குமே! பாதுகாப்பு அவரின் செட்டைகளின் மறைவில் மாத்திரமே. (சங். 91:4)

குடும்ப வாழ்க்கை நிலை:-

சிநேகிதனை விசுவாசிக்க வேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம். உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு. மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான். மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள். மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே (மீகா 7:5,6). இந்த வசனங்களைப் படிக்கும் போது, ஏதோ இன்றைய செய்தித்தாளை படிப்பது போலவே உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்ட இந்த வார்த்தை, நம் காலத்தினை குறிப்பது போலவே இல்லையா?

இந்த நிலையில் மீகா முழக்கமிடுகிறான் 'நானோவென்றால்' என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். 'உன்; தேவனாகிய கர்த்தர் எங்கே?' என்று சொல்லுகிற சத்துருவானவன், வெட்கத்தால் கண்களை மூடிக்கொள்ளுகிறதையும், அவன் மிதிக்கப்படுகிறதையும் என் கண்கள் காணும் என்று முழங்குகிறான். (மீகா 7:7-10)

ஏனெனில், அவர் 'என்னை அதிசயங்களைக் காணப் பண்ணுகிறார்' (மீகா. 7:15). ஏனெனில், அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார் (மீகா 7:19) என்ற நிச்சயம். 

எதிரிகளின் மத்தியில் தேவ கிருபை:-

ஆண்டவரின் பராக்கிரமத்தைக் கண்டு புறஜாதியார் வெட்கப்படுவார்கள், பாம்பைப் போல மண்ணை நக்குவார்கள். உனக்கும் பயப்படுவார்கள் என்ற வார்த்தைகளில் காணப்படும் உறுதி (மீகா 7:16,17),

மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறவர் என்ற அறிவு (மீகா 7:18) நம்மையும் இந்த நாட்களில் ஆட்கொள்வதாக.

தேவனின் செயல்:-

'உன் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகு தூரம் பரவிப்போம்' (மீகா 7:11). இந்த வசனத்தினை அநளளயபந வசயளெடயவழைn இப்படியாகச் சொல்லுகிறது. (ழுhஇ வாயவ றடைட டிந லழரச னயல. யு னயல கழச சநடிரடைனiபெ லழரச உவைலஇ ய னயல கழச ளவசநவஉhiபெ லழரச யசஅளஇ ளிசநயனiபெ லழரச றiபௌ.)

'கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்திரமான மந்தை' என்றே மீகா தேவ சபையினைக் குறித்து உணர்த்துகிறான்    (மீகா 7:14). 'ஜனங்கள் உன்னிடத்திற்கு வருவார்கள்' என்பதும் (மீகா 7:12), 'நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து உனக்குப் பயப்படுவார்கள் (மீகா 7:17) என்பதும் தேவன் தம்முடைய சபைக்குத் தரும் வல்ல வாக்கு அல்லவா! பற்றிக்கொள்வோம், பிரித்து எடுக்கப்பட்ட வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்வோம்.

ஊழியச் செய்திகள்:-

கடந்த ஆண்டில் நம்முடைய 7 வகையான ஊழியங்களிலும், உற்சாகத்தினையும் மற்றும் பெருக்கத்தினையும் காண தேவன் உதவினார். நான் தனிப்பட்ட விதத்தில், தேவ கிருபையினால், அவரின் சுத்த கிருபையினால், 400-க்கும் மேலான தடவைகள் பிரசங்கித்தேன்;. எனக்கே ஆச்சரியமாக உள்ளது. அதிகாரிகள் கண்களிலும், தேவப் பிள்ளைகள் மத்தியிலும் ஏராளமான தயவு கிடைக்கப்பண்ணினார். அவருக்கே மகிமை உண்டாவதாக.

1 யோவான் 2:19-ன்படி, சிலர் நம்மை விட்டு பிரிந்து போனார்கள். இந்த வசனத்தினை message translation இப்படியாகக் கூறுகிறது. ‘They left us, but they were never really with us. If they had been, they would have stuck it out with us, loyal to the end. In leaving, they showed their true colors, showed they never did belong’.மருத்துவப் பணியினைச் செய்து வந்த மருத்துவர் அசோக், தனி ஸ்தாபனம் ஆரம்பிக்க கர்த்தர் ஏவுகிறார் என்று சொல்லி, தன்னுடைய பணியை GEMS-ல் முடித்துக் கொள்கிறேன் என்றபோது, நடைபெற்றப் பணியினைப் பாதிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என்று மாத்திரம் அறிவுரை கூறினேன்;. அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். ஆனால், அப்படி நடக்கவில்லை; ஆயினும், 'தேவ இராஜ்ஜியம் கட்டப்பட்டால் போதும் என்ற சிந்தையோடு முன்னேறுகிறோம்'.

இந்தியாவின் நிலை:-

2024-ல் நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தேவன் இடைப்பட்டால் ஒழிய, வேறொன்றுக்கும் மாற்றத்திற்கான வாய்ப்பில்லை. தேவ சித்தம் மாத்திரம் நிறைவேற ஜெபிப்போம். சத்தீஷ்கர் மாநிலத்தின் முதல்வர் 'தாய் மதம் திரும்பு' என்ற கொள்கையிலே ஊறினவர். எனவே, அநேக உபத்திரவங்களை அங்கே உள்ள விசுவாசிகள் அனுபவிக்க நேரிடும். கூடவே, இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர்கள் தீவிர சுவிசேஷ எதிர்ப்பாளர்களே. 

தேவ ஜனங்களின் பாதுகாப்புக்காக ஜெபிப்பதோடு, ஊழியர்களுக்கு தேவ பலம் நிறைந்த தைரியம் உண்டாக ஜெபிப்போம்.

Global hunger index - 2014-ல் - 63-வது இடம்

(உலக பசி மாற்றக் குறியீடு) - 2023-ல் -101-வது இடம்

Passport index - 2014-ல் - 74-வது இடம்

(பாஸ்போர்ட் மாற்றக் குறியீடு) - 2023-ல் - 90-வது இடம்

World happiness index - 2014-ல் - 111-வது இடம்

(உலக சந்தோஷ வாழ்வு மாற்றக் குறியீடு) - 2023-ல் - 139-வது இடம்

Democracy index - 2014-ல் - 33-வது இடம்

(குடியரசு மாற்றக் குறியீடு) - 2023-ல் - 53-வது இடம்

Press free down - 2014-ல் - 140-வது இடம்

(பத்திரிக்கை சுதந்திரம்) - 2023-ல் - 142-வது இடம்

Gender gap index - 2014-ல் - 114-வது இடம்

(பாலியல் இடைவெளி மாற்றக் குறியீடு)-2023-ல் -140-வது இடம்

என்ற அதிர்ச்சி செய்தி நம்மை கவலைக்குள்ளாக்குகிறது; ஜெபிப்போம். போலியான எந்தக் காரியமும் தேசத்தினை உயர்த்தப்போவதில்லை. நம்முடைய ஜெபம் தேவனை இந்த தேசத்தில் கிரியை செய்ய வழி உண்டாக்குவதாக.


சுற்றிப் பார்த்தால் நடப்பவை யாவும் அக்கிரமமே

கற்றவர்களையும் களைத்துப்போக பண்ணுமே

தேவ ஜனத்திற்குப் பாதுகாப்பு அவரின் செட்டைகளின் கீழேயே

தேவ கிருபை நமக்குப் போதுமே அவரின் இரக்கத்தினாலேயே

தேசம் தேவனை அறியாமல் வாடிடுதே வதங்கிடுதே

தேடிச் செல்வோரும் நற்செய்திச் சொல்வோரும் தீவிரம் காட்டணுமே

முழங்கால் மடக்கி தலை குனிந்து தற்பரனை நோக்கிக் கதறிடவே

முழங்கால் யாவும் முடங்கிடுமே அவரின் நாமத்திலே


 

     அன்பரின் அறுவடைப் பணியில்

          அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்