வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன் (ஏசாயா 1:2) என்ற அறைகூவலோடு, ஜனத்தின் கவனத்தைக் கவர விரும்பும் ஆண்டவரின் நாமத்தில் வாழ்த்துகள்.
இந்த நாட்களில் GEN-Z என்றும் GEN-Alpha என்றும் அதிக செய்திகள் வருகிறதையும், அவர்களின் உட்கோபம் பலவிதங்களில் வெளிப்படுகிறதையும், அவர்கள் நினைத்தால் ஒன்றிய அரசினையும் மற்றும் மாநில அரசினையும் நடுங்கவைக்கமுடியும் என்றும், அல்லது வளைக்கமுடியும் என்றும் நாம் கூறக்கூடிய அளவிற்குக் காரியங்கள் மாறிவருகின்றன. எங்களுக்குக் கொடுக்கப்படும் கல்வியின் தரமும், கல்விச் சாலைகளும், பரீட்சைகளும் சரியாக இல்லை. எங்களுக்கு அவைகள் வேலை வாய்ப்பை உண்டாக்க வழியையும் காட்டவில்லை; பணம்படைத்தவர்களின் பிள்ளைகள் குறுக்கு வழியை உபயோகப்படுத்துகின்றனர்; அரசியல்வாதிகளும் மற்றும் அதிகாரிகளும் பணம் படைத்தவர்கள் பக்கமே நின்று செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை அவர்கள் ஓங்கி ஒலிக்கச்செய்துள்ளார்கள்.
கடந்த 12 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒன்றிய அரசு செய்தது என்ன? என்ற கேள்விக்குப் பதிலாக, அதானியின் சொத்து, 4400 கோடி 11.6 லட்சம் கோடியாக அதாவது, 1500 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும், அம்பானியின் சொத்து 1.5 லட்சம் கோடி 10 லட்சம் கோடியாக அதாவது, 580 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அறிக்கைகள் சொல்கின்றன. இது மோடி Magic ஏழை மாணவர்களின் கேள்விகள் நியாயமானதுதானே? வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்போரின் கூக்குரல் இப்போது GEN-Z வாலிபர்கள் மூலம் தேசத்தில் கேட்கிறது. இதனைக் கவனிக்குங்கால், ஏசாயா தீர்க்கனின் சொற்களே ஞாபகத்தில் வருகின்றன.
'இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும் இதனை unemployment என்று சொல்லலாம், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும் இதனைந examinations என்று சொல்லலாம்;
பராக்கிரமசாலியையும், யுத்தவீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், சாஸ்திரியையும், மூப்பனையும்; ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும், ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.
வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள். ஆம் சிறு பிள்ளைகளை வைத்து பெரியவர்களை மிரட்டின தமிழக முதல்வர் மீதும், அமைச்சர்கள் மேலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளதே. ஜனங்கள் ஒடுக்கப்படுவார்கள்; ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள்; வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடும்பு செய்வான் (ஏசாயா 3:1-5) என்ற வார்த்தைகள் அப்படியே நிறைவேறுகிறதனை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.
தமிழக மந்திரிகளும், சட்டசபை உறுப்பினர்களும் கூட எதைப் பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்றே அறியாமல், நம்பரைக் கூட ஒழுங்காகச் சொல்லக்கூடாத நிதி அமைச்சரின் செயல்களும், தகவல்களை ஒழுங்காக அறியாத அமைச்சர்களும் மற்றும் சட்டசபை உறுப்பினர்களும் நடந்துகொள்ளும் விதம், அதுவும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுவதால் இளைய சமுதாயம் தடுமாறி நிற்கிறதனைக் காணமுடியும்.
பீகாரில் கூலிவேலை செய்கிறவருடைய மகன் (தாய் சுத்தப்படுத்தும் பணியில் உள்ளார்கள்), முதல் வகுப்பு மாணவன், மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டபோது, 6 வயது சிறுவனின் கேள்விகளையும், அரசியல், சமூக அறிவையும் கண்டு உலகமே வியந்தது. GEN-Alpha வைச் சார்ந்த பிள்ளையா? என்று அநேகர் அதிர்ந்துபோயினர். அவன் கைதுசெய்யப்பட்டான். அது எந்த சட்டப் பிரிவைச் சார்ந்தது? என்று நீதிபதியைக் கேட்கும் அளவுக்கு அறிவு எங்கேயிருந்து வந்தது? அது காலத்தின் கோலமா? இல்லை தேவன் முன்னறிவித்தபடி நடைபெறும் நிகழ்வா?
ஒருபக்கம் இயற்கைச் சீற்றம், வெள்ளப்பெருக்கினாலும் மற்றும் மழையின் கொடூரத்தினாலும் விவசாயத்தினை அழிக்கப் போதுமானதாக உள்ளது. முட்டை ஒன்றின் விலை ரூபாய் 12. வடஇந்தியாவில் குளிர்காலத்தில் முட்டை விற்பனை வெகு ஜோராக நடைபெறும்; ஏனெனில், மக்கள் தங்கள் உடலை சூடாக வைத்துக்கொள்ள அது உதவும் என்பதனால். 40 சதவீதம் முட்டை விலை உயர்ந்திருப்பது, ஏசாயா இதே பகுதியில் சொல்லியிருக்கும் பஞ்சகாலத்தின் முன்அடையாளமோ? விலைவாசி ஏற்றத்தினால் பறிபோகும் ஏழை மக்கள்; ஏன், நடுத்தர வருமான வர்க்கமும் கூடவே சேர்த்துக்கொள்ளப்படவேண்டுமே.
வாலிபரின் பெலத்தினை அண்டைநாடுகளான இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் கண்டதுபோல, ஒரு காரியம் சிறிய அளவில் இந்தியாவிலும் தொடங்கியுள்ளதனை உணர்ந்த BJP-யும் கூட, GEN-Z-ஐ சந்திக்க சில யுக்திகளைச் செய்ய வேகம் காட்டுகிறது.
ஆனால், பரிதாபம் என்னவென்றால், கர்த்தரின் சபையோ, சங்கங்களோ இதனைக் குறித்த தெளிவற்றவர்களாய், செயல்முறைகளை அறிமுகப்படுத்த ஆண்டவரின் பாதத்தில் கதறி காத்திருந்து செயல்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தத் தவறிவிட்டன. ஆனால், இனியாவது விழித்துக்கொள்ளலாமே!
பிரசங்கபீடத்தில், ஆற்றுவதும், தேற்றுவதுமே அதிகமாகி, 40 வயதிற்கு மேற்பட்டோரையே குறியாகக் கொண்டு செய்தியளிக்கப்படுவதால், இளைய சமுதாயம் உலகத்திலும், செல்போனிலும், சாரத்தையும் சக்தியையும் செலவழிக்கத் தொடங்கிவிட்டனர். இது, தற்கொலைக்கு அநேகரைத் தள்ளிவிட்டதே!
அரசியலில் தமிழக இளைஞர்கள் 'வசீகரத்தினை' நம்பி உற்சாகப்பட்டுள்ளனர். ஆனால், திசை தெரியாமல் உணர்வுகளையே வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள்; அதுவும், தற்காலிகமாக எழும்பும் உணர்வுகளையே.
சிலர், ஆண்களும், பெண்களும் போதைக்கு நேராகத் திரும்ப ஆரம்பித்துள்ளனர். இதற்கு சபைதான் பொறுப்பு எடுக்கவேண்டும். பிரசங்கிகளும், போதகர்களுமே பொறுப்பாளிகள் (எசேக்கியேல் 44:23).
ஆனால், அவர்களோ, அந்தந்த வயதிற்குரியவர்களுக்கேற்ற தலையணையையும், தழுவனைகளையும் செய்து சுகமாக வாழ அல்லது சோம்பேறிகளாக மாற வழிசெய்துவிட்டார்கள் (எசேக்கியேல் 13:18,21).
பாட்டு எழுதுகிறவர்களும், பாடலைப் பாடுகிறவர்களும், கிறிஸ்தவ இசைக் கலைஞரும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் இசைக்க ஆரம்பித்து, வியாபாரத்தினைப் பெருக்கிக்கொண்டனர்.
கூடவே, அந்தப் பாடலை அறிமுகப்படுத்த ஊட்டி, கொடைக்கானல் போன்ற நகரங்களிலும் மற்றும் சுவிஸ் தேசத்தின் இயற்கையின் பின்னணியில் அதனைப் படமெடுக்கப் படையெடுத்து, பல லட்சங்களைக் கொட்டி உருவாக்குகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தேவையெல்லாம் எநைறள காட்டப்படவேண்டும் என்பதே. சிலர் ஊடகங்களுக்குப் பணம் கொடுத்து, அதை பல மில்லியன்கள் பார்க்கிறதாக ஒரு மாயத்தினை உருவாக்குகிறார்கள்.
போதாக்குறைக்கு, பிரபலமாகவேண்டி, இந்த முயற்சி தமிழ் பேசும் உலகில் அநேகரை நடிகர்களாக மாற்றியுள்ளதே தவிர, பரிசுத்தவான்களாக மாற்ற முடியவில்லை (1 கொரிந்தியர் 1:2). ஏன், வயதாகிப்போன பெரிய ஊழியர்களும் இசைக்கு ஏற்றாற்போல நடனமாடி, தங்கள் தரத்தினைக் குறைத்துக்கொண்டார்கள்.
கர்த்தரின் பணிக்குச் சேரவேண்டிய அதிக பணம் இவர்களின் நடிப்புத் தொழிலுக்கும், வருமானத்தினைப் பெருக்கிக்கொள்ளவும் வழிசெய்திருக்கிறதே அல்லாமல், பக்திவிருத்தியினைக் கொண்டுவரவில்லை. சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகவே செய்யப்படவேண்டியது வேதத்தின் விதி அல்லவா! (2கொரிந்தியர் 12:19; 1கொரிந்தியர் 14:17,26; 1தெசலோனிக்கேயர் 5:11; எபேசியர் 4:11-13,29; ரோமர் 4:19; 15:2).
அவர்கள் படக்காட்சிகளுக்காக மாற்றிவரும் உடைகள், இந்தியப் பிரதமரையும் மிஞ்சிவிடும். ஒரு பாட்டுக்கு ஒரு பெரிய ஊழியர், தன்னை பெரிய ஊழியராகக் காட்டிக்கொள்ளும் ஊழியர், ஏழு விதவிதமான உடைகளை மாற்றியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வீடியோ கேமராவுக்காக அவர்களுக்குக் கூடவே ஒரு மேக்கப் ஊழியர், அடிக்கடி முகத்தின் வேர்வையினை, வழியும் எண்ணெயினைத் துடைத்து விடும் காட்சியை, படக்காட்சி எடுக்கும் வேளையில் செய்யப்படும் ஆயத்தக் காட்சிகளைக் காட்டும்போது, நமக்கு வேதனைதான் ஏற்படுகிறது. இதனை இவர்கள் அபிஷேகம் என்று சொல்வார்கள். ஆனால், அது கோமாளியாக்கப்படுகிறோமே என்று உள்மனது போராடுவதால் உண்டாகும் எண்ணெய் வடியும் முகம்.
முடியில்லாதவனுக்கு 'டோப்பா' அல்லது மயிரை முளைக்கவைக்கும் வைத்தியம், ஆடத்தெரியாதவனுக்கு ஆடல் (choreography) சொல்லிக்கொடுக்க ஒரு நடனக் கலைஞர் கூடவே செல்கிறார். உதவி நடிகர்களாக சபையின் வாலிபர்கள், சில வேளைகளில் மனைவியையும் மற்றும் பிள்ளைகளையும் உதவிநடிகையாக்க முயற்சிசெய்து, அவர்களை 'ஹீரோ'வாக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு உதவும் ஒரு நாடக மேடைக் கலைஞன், இவைகள் அனைத்தும் சினிமாத் துறையை மிஞ்சிவிடும்; இதற்குச் செலவுசெய்பவை யாவும் வஞ்சகப் பிரசங்கத்தினால், விசுவாசிகளைக் கசக்கிப் பிழிந்ததினால் வருவது, அது இப்படி வீணடிக்கப்படுகிறது.
பரவசத்தைத் தூண்டும் இசை பக்திவிருத்தியை ஒருபோதும் உண்டாக்கினது இல்லை. அதுதான் இன்றைக்கு சபை வளர்ச்சியைச் செய்ய உபயோகப்படுத்தப்படும் (manufactured) மனித முயற்சிகள்.
அன்று மறைந்த ஊழியர் மோசஸ் ராஜசேகர் எழுதினார்.
'என் சுய பெலத்தால் ஓடிப்பார்த்தேன் ஓட முடியல
என் மன பெலத்தால் நடந்துபார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்துபார்த்தேன் சுமக்க முடியல
என் கால் பெலத்தால் கடந்துபார்த்தேன் கடக்க முடியல
என் ஆள் பெலத்தால் ஆளப்பார்த்தேன் ஆள முடியல
என் பண பெலத்தால் படைக்கப்பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பெலத்தால் சாதிக்கப்பார்த்தேன் ஒன்றும் முடியல
என் வாய் பெலத்தால் வாழப்பார்த்தேன் வாழ முடியல' என்று.
ஆனால், இந்த மாய ஊழியர்களோ, இதுதான் எழுப்புதல் என்று 'பொய்யான சித்திரத்தினை மக்களுக்குச் சொல்லிக்கொடுத்து, இளைய சமுதாயத்தினை கேட்டுக்கு நேராகத் திருப்பிவிட்டார்கள்.'
'பொல்லாதவர்களும், எத்தருமானவர்கள், மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாயிருந்து மென்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்' (2 தீமோத்தேயு 3:15) என்பதுதான் இவர்களைக் குறித்த கணிப்பு.
'கெட்ட சிந்தையுள்ளவர்கள், சத்தியமில்லாதவர்கள், தேவபக்தியை ஆதாயத் தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிறார்கள்' (1 தீமோத்தேயு 6:5) என்று அடையாளம் காட்டித்தருகிறார் பவுல்.
தவறான உபதேசத்தை உடையவர்கள் என்று அறிந்தும், அவர்களின் பணத்தினை இச்சித்ததினால் அவர்களுக்கு மேடை போட்டுக்கொடுத்து), அது ஆந்திராவைச் சேர்ந்தவராயிருந்தாலும், கொரியாவைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும், தங்கள் மந்தையைக் கூட்டிக்கொண்டு அழைத்துவிடுபவர்களுக்கு தலைக்கு கூலி பேசி, தங்கள் ஆசைகளைப் பூர்த்திசெய்கிறார்கள்.
வேறு சிலர், வெளிநாட்டில் வசிப்பதினால் அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தாலந்துகளை விளம்பரத்திற்காக உபயோகிக்க இந்தியா வந்து, இசைக்கலைஞர்களையும், சில அறியப்பட்ட பாடகர்களையும் பணத்தினால் விலைக்கு வாங்கி, பாடல்களை அறிமுகப்படுத்துகிறார்கள். அது ஒருவேளை அவர்களுக்கு ஒரு திருப்தியைத் தந்துவிடலாம், ஏதோ கிறிஸ்துவுக்காய் சாதித்துவிட்டதுபோலவும், சம்பாத்தியத்தினை தேவ காரியத்திற்காக செலவிட்டுவிட்டதுபோலவும் ஒரு மாயையை நம்பி, பல லட்சங்களை தண்ணீராய் இறைத்து பரலோகம் இதனைக் குறித்து என்ன நினைக்கிறது என்பதனைக் குறித்து கவலைப்படாமல், (ளுழஉயைட அநனயை) சமூக வலைதளத்தில் தங்களுக்கு எத்தனை Views (பார்வையாளர்கள்) வந்தது என்று அதில் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஏமாளிகள் நம் மத்தியில் பெருகிவருகிறார்கள்.
ஆதித்திருச்சபையில், தேவபணியில் எதிர்த்து நின்று அட்டகாசம் செய்துகொண்டிருந்த சவுல், கர்த்தரால் சந்திக்கப்பட்டு, தீவிரமாக கர்த்தருக்கு ஊழியம் செய்கிறான் என்று கேட்டபோது, சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின (அப்போஸ்தலர் 9:31).
சபைப் பெருக்கத்தினைப் போதிப்போர் (church growth), பவுல் அப்போஸ்தலர் நடபடிகளிலே உபதேசக் குழப்பங்களுக்குத் தீர்வுகாண எருசலேமுக்குப் போய் முன்னோடிகளைச் சந்தித்து, திரும்ப வந்து சபைகளை சீரியாவிலும், சிலிசியாவிலும் சுற்றித் திரிந்து சபைகளைத் திடப்படுத்தினான் என்பதனை மறக்கலாகாது.
திடப்படுத்தி, பிரயாணம் செய்துவந்ததினால், சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு நாளுக்கு நாள் பெருகின.
ஆனால், பக்திவிருத்தி செய்யும் விந்தைதான் இது. ஆனால், உடனே ஆவியானவர் அவர்கள் அறிவிக்கப்படாத ஐரோப்பாவுக்கு நேராகத் திருப்பிவிடுகிறதனைத்தான் அப்போஸ்தலர் 16:6-12 நமக்குச் சொல்கிறது.
சபை திடப்படுத்தப்பட்டால், தேவ ஆவியானவர் அறியப்படாத பகுதிகளுக்குத்தான் அவர்களைத் திசைதிருப்புகிறார்.
நீங்கள் நீதிக்கென்று விதை விதையுங்கள் தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள் உங்கள் தரிசு நிலங்களைப் பண்படுத்துங்கள் (ஓசியா 10:13). விழுந்துபோன சபையை உயிர்ப்பித்த பின்பு அதற்கு கொடுக்கப்படும் கட்டளை இது.
தரிசு நிலம் என்பது தாவரங்கள் வளர முடியாத, வெறுமையான அல்லது சேதமடைந்த நிலப்பரப்பு, அல்லது எந்தவித நேர்மறை, ஆக்கப்பூர்வமான அல்லது பயனுள்ள குணங்கள் இல்லாத சூழ்நிலையாகும்.
நேரடி பொருள்:
மலட்டு நிலம்: பாலைவனம் போல பாறைகள், மணல் அல்லது வறண்ட நிலம்.
பாழான பூமி: கடுமையான மாசுபாடு, நச்சுக் கழிவுகள் அல்லது மோசமான வானிலையால் அழிக்கப்பட்ட பகுதிகள்.
பயன்படுத்தப்படாத நகர நிலங்கள்: நகரங்களில் அல்லது அதன் அருகில் கவனிக்கப்படாமல், குழப்பமாக விடப்பட்ட வெற்று இடங்கள்.
உருவகப் பொருள்:
கலாச்சார வெறுமை: நல்ல கலை, கருத்துக்கள் அல்லது கற்றல் இல்லாத சூழ்நிலை அல்லது இடம் (உதாரணமாக, 'மோசமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை' 'கலாச்சார தரிசு நிலம்' என்று அழைப்பது).
உணர்ச்சி வெறுமை: சோகமாக, வெறுமையாக, குளிராக உணரும் வாழ்க்கையின் ஒரு காலம் அல்லது மனநிலை.
தலைமுறைகள் பொதுவாக பகிரப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், கலாச்சார சூழல்கள் மற்றும் வேகமான தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இன்று உலகில் உள்ள தலைமுறைகள் இங்கே:
சைலண்ட் தலைமுறை (பிறப்பு 1928 - 1945)
தற்போது வயது 81 முதல் 98. இவர்கள் பெரும் பொருளாதார மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போரை கடந்து வாழ்ந்த தலைமுறையினர்.
பேபி பூமர்கள் (பிறப்பு 1946 - 1964)
தற்போது வயது 62 முதல் 80. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட மக்கள்தொகை வளர்ச்சியால் பெயரிடப்பட்ட இவர்கள், உலக கலாச்சாரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் நவீன பணியாளர் தொகுப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினர்.
தலைமுறை X (பிறப்பு 1965 - 1980)
தற்போது வயது 46 முதல் 61. தகவமைப்புத் தன்மையால் அறியப்படும் இந்த குழு, அனலாக் உலகத்திலிருந்து டிஜிட்டல் யுகத்தின் ஆரம்ப நாட்களுக்கு மாறிய காலத்தில் வளர்ந்தவர்கள்.
மில்லினியல்கள் / ஜென் Y (பிறப்பு 1981 - 1996)
தற்போது வயது 30 முதல் 45. புதிய ஆயிரமாண்டைச் சுற்றி வளர்ந்த முதல் தலைமுறை, இவர்கள் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவர்களாகவும், சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தின் எழுச்சிக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டவர்களாகவும் அறியப்படுகிறார்கள்.
தலைமுறை Z (பிறப்பு 1997 - 2012)
தற்போது வயது 14 முதல் 29. பெரும்பாலும் 'Zoomers' என்று அழைக்கப்படும் இவர்கள், ஸ்மார்ட்போன்கள், ஸ்ட்ரீமிங் மற்றும் பரவலான சமூக ஊடகங்களுடன் வளர்ந்த முதல் உண்மையான டிஜிட்டல் தலைமுறையினர்.
தலைமுறை ஆல்பா (பிறப்பு 2013 - 2025)
தற்போது வயது 1 முதல் 13. இது முழுமையாக 21 ஆம் நூற்றாண்டில் பிறந்த முதல் தலைமுறை, பேசுவதற்கு முன்பே ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் AI போன்ற தொழில்நுட்பங்களுடன் பிறந்தவர்கள்.
தலைமுறை பீட்டா (பிறப்பு 2026 - 2039)
2026 முதல் பிறப்பவர்கள். இது இப்போது பிறந்து கொண்டிருக்கும் புதிய குழந்தைகளின் தலைமுறையாகும்.
இந்தத் தலைமுறையினைச் சந்திக்க சபைகள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் என்ன?
பரவசத்தில் அவர்களை மயக்க நிலைக்குத் தள்ளி, அவர்களைக் கற்பழித்து (ஆவிக்குரிய கற்பழிப்பு) அல்லது கற்பைச் சூறையாடி கெடுத்துப்போடும் ஊழியர்களை அடையாளம் காட்டிக்கொடுப்போர் யார்?
சபைதனை கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்ற ஒருவருக்கே ஒப்புக்கொடுக்க, தேவ வைராக்கியம் கொண்ட பவுல்கள் எங்கே? (2 கொரிந்தியர் 11:2).
இந்தத் தலைமுறையைச் சந்திக்கவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், சினிமாக்காரர்களும், சமூக வலைதளங்களை இயக்குவிப்போர்களும் அப்படிப்பட்டவர்களை சந்திக்கவும் தங்களுக்குச் சாதகமாக மாற்றவும் இரவு பகலாய் உழைத்துக்கொண்டிருக்கும்போது, தேவ சபை விளையாடிக்கொண்டும், வேடிக்கை செய்வோரை ரசித்துக்கொண்டும், இது காலத்தின் கோலம் என்று கடிந்துகொண்டு பிரசங்கிக்கவேண்டியவர்கள் (2 தீமோத்தேயு 4:2),
கண்டிப்பாக, கடிந்துகொள்ள அதிகாரம் பெற்றவர்கள் (தீத்து 1:14), விசுவாசிகளைத் தாலாட்டிக்கொண்டிருப்பது எத்தனை பரிதாபம். அவர்கள் கோலியாத்தினை எதிர்க்கும் தாவீதுகளை ஒருநாளும் எழுப்பப்போவதில்லை. உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன். உம்மாலே ஒரு மதிலைத் தாண்டுவேன் (சங்கீதம் 18:29) என்று கூறுவோரும் அவர் என்னை பெலத்தால் இடைகட்டி என் வழியைச் செவ்வைப்படுத்துகிற தேவன் (சங்கீதம் 18:29),
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார் (சங்கீதம் 18:32). இதனைச் சொல்லும்போதுதான் 'உம்முடைய காருண்யம் என்னைப் பெரியவனாக்கும்' (சங்கீதம் 18:34,35).
ஆனால், இன்றோ, 'காருண்யம்' பெரியவனாக்கும் என்கிற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் ஆக்கிவிட்டார்களே! 'கிருபையை வீணடிக்கிறார்களே! (யோனா 2:8).
மந்தையின் ஆடுகளை, சிறந்த யுத்த குதிரையாக மாற்றத் துடிக்கும் நல்ல மேய்ப்பனாம் அவர், தான் சேனைகளின் கர்த்தர் எனச் சொல்லி, மேய்ப்பருக்கு விரோதமாய் என் கோபம் மூண்டது என்கிறார் (சகரியா 10:3).
சேனைகளின் கர்த்தர் என்று அவரை அடையாளப்படுத்தவேண்டிய சபையும், அதின் ஊழியரும், இயேசுவை 'ஆயாவாக' தொட்டில் போட்டு 'ஆராரோ' பாடும் இயேசுவாக சித்தரித்துவிட்டார்களே! என்னே கொடுமை!!
மந்தையினை யுத்தக் குதிரையாக மாற்றவேண்டியவர்கள்
சிந்தையில் செருக்குற் றோராய் தங்களுக்கு ஆதாயமாக்கினார்
தேவ ஊழியம் என்ற பெயரில் விளம்பரப் பிரியராய்
தேவைதனைக் காணாத கயவர்களாய் கண்சொறுகச் செய்தார்
ஆடினால்தான் எழுப்புதல் என்று ஆண்டவரின் கிரியையை மட்டுப்படுத்தினர்
பாடியே நடிகர்களாக மாறிப்போயினர் தேவ மக்கள்
தரிசு நிலங்களைக் குறித்தத் தரிசனமற்றோராய்
குறியெல்லாம் தனக்கு பணமே என்று உணர்த்திவிட்டனர்
இந்தத் தலைமுறை கண்டதெல்லாம் கானல் நீரே
இயேசுவைக் காண்பிக்க தவறினதால் ஏமாந்தவர் ஏக்கம் தெரியவில்லை
'இனி காலம் செல்லாது' என எதிரி அறிந்துள்ளான்
ஆனால் நம்மவரோ அதனை உணராத குருடராகிப் போயினர்
தேவா இந்த அவல நிலையை மாற்ற எழும்பிடுவீர்
தேவ பினெகாசுகள் பிள்ளையென்றும் பாராமல் செயல்படும் செயல்வீரர்
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்