அன்பின் மடல் January 2025

 


அன்பின் மடல்

January 2025


கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 


கடந்த 2024-ம் ஆண்டு முழுவதும், நாம் கடந்துவந்த எல்லா பாதைகளிலும் மற்றும் சூழ்நிலைகளிலும், கைவிடாமல் நம்மைக் கண்மணி போலக் காத்து வழிநடத்தினவரும், இனிமேலும் 'நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்' 

(ஏசா. 46:4) என்று தாம் வாக்குரைத்த வண்ணம், 2025-ம் ஆண்டிற்குள் நம்பிக்கையுடன் நம்மை நுழையச் செய்தவருமாகிய ஆண்டவரின் நாமத்தில் அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இப்புதிய ஆண்டில், 46-ம் சங்கீதத்தின் வசனங்களே, வருடத்தின் ஒவ்வொரு நாளும், தனிவாழ்வில், குடும்ப வாழ்வில் மற்றும் ஊழியத்தின் பாதையில் உங்களைத் தூக்கிச் சுமக்கும் என்று நம்பி இதனையே உங்களுக்கு எழுதுகிறேன்.

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், 

அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். 

ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.  

தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது| அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.

ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது| அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்| யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.

பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள்.

அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்| வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்| இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்| ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். 


அன்பரின் அறுவடைப் பணியில்,

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்